News Just In

12/12/2019 06:29:00 PM

மூன்று வாரங்களின் பின்னர் மட்டு மாவட்டம் வழைமை நிலைக்கு


மூன்று வாரங்களுக்கு மேலாகப் பெய்த அடை மழை தற்போது நீங்கியுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.

வெள்ளம் வடிந்தோடுகின்ற நிலை தற்பொழுது காணப்படுகின்றது. வெள்ளம் காரணமாக 19086 குடும்பங்களைச் சேர்ந்த 66241 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த அன்றாட நடவடிக்கைககள் தற்பொழுது வழமைக்குத் திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

மாவட்டத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெறுதுடன் தொழில் நடவடிக்கைககளும் வழமை போன்று இடம்பெறுகின்றன. இம்மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்த நலன்புரி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: