News Just In

12/25/2019 12:49:00 PM

சுதந்திர தினத்தன்று தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவதற்கு அரசு தீர்மானம்

இலங்­கையின் 72ஆவது சுதந்­திர தின நிகழ்­வு­களை பெப்­ர­வரி 4ஆம் திகதி சுதந்­திர சதுக்­கத்தில் நடத்­து­வ­தற்கும் தேசிய கீதத்தை சிங்­க­ளத்தில் மட்டும் பாடு­வ­தற்கும் அர­சு தீர்­மா­னித்­துள்­ளது.

சுதந்­திர தின நிகழ்வு தொடர்­பாக அரச நிர்­வாக அமைச்சில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

அத்­துடன் சுதந்­திர தினத்தில் இடம்­பெற ஏற்­பா­டாகி இருக்கும் கலை நிகழ்ச்­சிகள் மற்றும் வேறு நிகழ்­வு­களை ஒத்­திகை பார்க்­கும்­போது, மக்­க­ளுக்கு இடை­யூ­றுகள் ஏற்­ப­டா­த­வ­கையில் மேற்­கொள்­ளவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. விசே­ட­மாக சுதந்­திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்­க­ளத்தில் மட்டும் பாடு­வ­தென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் சுதந்­திர தின நிகழ்­வின்­போது 2016ஆம் ஆண்­டிலே முதல் தட­வை­யாகத் தமிழில் தேசிய கீதம் பாடப்­பட்­டது. அத­னைத்­தொ­டர்ந்து கடந்த 3வரு­டங்கள் (2019வரை) தமி­ழிலும் தேசிய கீதம் பாடப்­பட்­டு­வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளுக்கு இணை­யாக நாடு பூராகவும் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் ஒன்றையும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: