News Just In

12/25/2019 05:06:00 PM

சுனாமி அனர்த்த 15ஆவது ஆண்டு நினைவு-அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அறிவித்தல்

2004ஆம் ஆண்டு இலங்கை உட்பட பல நாடுகளை தாக்கிய சுனாமி அனர்த்தம் இடம்பெற்று நாளையுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: