முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை இடை நிறுத்தியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலை சீர் இன்மையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜித தங்கியிருந்து சிகிச்சை பெறும் நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியரின் பரிந்துரைக்கமைய, அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய, சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களுடன் அம்பியூலன்ஸ் ஒன்றும் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
எனினும், முன்னாள் அமைச்சர் ராஜிதவின் உடல் நிலை மோசமாக உள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து, அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட்டதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: