News Just In

12/26/2019 01:16:00 PM

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின அனுஷ்டிப்பு நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சுனாமி கடற் பேரலைத் தாக்கம் ஏற்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் மாவட்டம் தோறும் நடைபெறும் தேசிய பாதுகாப்பு தின அனுஷ்டிப்பு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை 26.12.2019 நடைபெற்ற இந்நிகழ்வில் சுனாமியில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் உறவினர்களின் நலன்வேண்டியும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருந்ததுடன் பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் சுனாமி இடர் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இடர்களின் முன்னேற்பாடுகள், தாக்கங்களிலிருந்து வெளியேறும் முறைகள் பற்றியும் செயல் முறையிலான விளக்கவுரை நடாத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பல அதிகாரிகளும் அலுவலர்களும் பங்குபற்றினர்.

No comments: