
வியாழேந்திரன் அரசியலுக்கு வரும் முன் என்னுடைய ஒரு பணிவான மாணவன், தற்போது தமித் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கட்சி மாறினார் நாறினார் என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
உன்னிச்சை கிராமத்தில் உன்னிச்சை குளம் அமைந்துள்ள பகுதியில் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியவர்கள் மீண்டும் வெற்றி பெற்றதில்லை, அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடங்களை புகட்டி உள்ளனர். அதற்கு கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கட்சி மாறியவர்கள் உதாரணம்.
காசுக்காக நாங்கள் கட்சி மாறுவதென்பது ஒரு தவறான விடயம். கடந்த காலத்தில் ஒக்டொபர் சதிப் புரட்சி நடைபெற்ற காலத்தில் எங்களுக்கு எல்லாம் விலை வைத்தனர், 30 கோடி என காளியம்மன் கோயில் காலத்தில் கோழிச் சேவலுக்கு விலை வைப்பது போல் வைத்தனர்.
எங்களது கட்சியில் 16 பேர் இருந்தனர், ஒரே ஒருவர்தான் மாறினார் நாறினார் என்றுதான் நான் சொல்ல வேண்டும். இங்கிருந்து வேற ஒருவரும் மாறவும் இல்லை நாறவும் இல்லை .
ஏன் என்றால் கட்சி மாறினால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் எடுத்துக் கொண்ட விடயத்தில் கவனமாக, கண்ணியமாக இருக்க வேண்டும் இல்லாது விட்டால் மக்கள் மூலமாக எங்களுக்கான தண்டனை தரப்படும்.
எனக்கு ஒரு அரசியல் விருப்பமான விடயம் இல்லை, கட்டாயத்தின் காரணமாகத்தான் வந்தனான், இப்போது யார் யாரோ விரல் நீட்டி கதைக்கின்றனர், கல்வித்துறையில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது, எனக்கு இழப்புத்தானே தவிர வருமானம் ஏதும் இல்லை,


No comments: