-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
திருகோணமலை மாவட்டத்தில் சமீபத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் தமது வாழ்வாதாரத்தைத் தேடி இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை 3 மாத காலத்திற்கான உலர் உணவு நிவாரணத்தை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சிவசுப்பிரமணியம் நந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பான வேண்டுகோள் மனுவை வியாழக்கிழமை 26.12.2019 தான் திருகோணமலை மாவட்டச் செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள நந்தகுமாரின் வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மக்கள் பல்வேறு வகைப் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிட்டது.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெருகல் பிரதேசத்தில் வெள்ளம் பாய்ந்தோடியதால் பல நூற்றுக் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் தற்காலிகமாக தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது.
கடலைகளின் வேகம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாதுள்ளனர். அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவோர் தொழிலுக்கு செல்ல முடியாததால் ஒரு வேளை உணவுக்கே அல்லற்படுகின்றனர்.
எனவே இந்நிலையை ஓரளவு தற்காலிகமாக தீர்ப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தேடி இயல்பு நிலைக்கு மீளும் வரையிலும் திருகோணமலை மாவட்ட மக்களுக்கு மூன்று மாத காலத்திற்கான உலர் உணவு நிவாரணத்தை வழங்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
12/26/2019 12:59:00 PM
Home
/
உள்ளூர்
/
திருகோணமலை
/
வெள்ளப் பாதிப்பு
/
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வேண்டுகோள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வேண்டுகோள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: