News Just In

12/26/2019 11:30:00 AM

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வாகன விபத்தில் உயிரிழந்த இந்திய பிரபல எழுத்தாளர்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியாவின் பிரபல எழுத்தாளரான கங்கா பிரஷாத் விமல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

80 வயதான இவரும் அவரது உறவினர்களும் விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கங்கா பிரசாத் விமலின் மேலும் 2 உறவினர்கள் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பயணித்த வாகனத்தின் சாரதியும் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவராவார். இந்த எழுத்தாளர் பல நூல்களை எழுதியுள்ளதுடன் பல விருதுகளையும் பெற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: