News Just In

12/27/2019 10:16:00 PM

மாவட்ட ரீதியில் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் (பழைய) முதலிடம் பெற்று செங்கலடி மாணவன் சாதனை


(சுபா)
நடந்து முடிந்த க.பொ.த  உயர்தரப்  பரீட்சை முடிவுகள் வெளியாகிய நிலையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் விஜயசுதாகர் மிருனுகிருஷாந் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் பழைய பாடத்திட்டத்தில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தினையும், தேசிய ரீதியாக 37ஆவது (Z.Score- 2.1326) இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

செங்கலடி பிரதேசத்தினை சேர்ந்த மிருனுகிருஷாந் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்-B, பொறியியல் தொழில்நுட்பத்தில்-B, தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம்-A  சித்தியினையும் பெற்று பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


No comments: