News Just In

12/25/2019 11:22:00 AM

அரச சேவையாளர் வீடமைப்புத் திட்டப் பணிகளை விரைவாக பூரணப்படுத்துமாறு பிரதமர் பணிப்பு

அரச சேவையாளர்களுக்காக நிர்மாணிக்கப்படும் பொரள்ளை-வனாதமுல்ல ஓவர் வியூ ரெசிடன்ஸி வீடமைப்புத் திட்டத்தின் பணிகளை விரைவாக பூரணப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

25 அடுக்குமாடிகளைக் கொண்ட இக்கட்டடத் தொகுதியில் 608 வீடுகள் அமையவுள்ளது. வீடமைப்புத் திட்டத்திற்காக ஆறு பில்லியன் ரூபா நிதி ஓதுக்கப்பட்டுள்ளது.. வீடமைப்புத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் கடந்த ஆட்சியின்போது ஒன்றரை வருட காலம் தாமதமானது.

அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய நகர அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்த்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்தபோது அவரின் எண்ணக்கருவிற்கு அமைவாக 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எனினும்இ 2015ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டது, பின்னர் 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

No comments: