News Just In

12/07/2019 03:26:00 PM

மணல் ஏற்றுவதற்கு எதிர்ப்பு! மட்டு அரச அதிபர் கவனம் செலுத்த மக்கள் கோரிக்கை!

(சுபா)
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை ஒருமுழச்சோலை கிராமத்தில் இருந்து பல மாத காலமாக மணல் வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது இதை நிறுத்துவது தொடர்பாக பல நடவடிக்கை மேற்கொண்டும் பலனளிக்காததால் பொதுமக்கள், கொம்மாதுறை வடக்கு கிராம  அபிவிருத்தி சங்கம், மாதர் அமைப்பு, கொம்மாதுறை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம், கொம்மாதுறை வடக்கு கிராம சேவையாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் மண் ஏற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இம் மணல் கொண்டு செல்வதன் மூலம் எமது பிரதேச வெள்ள அபாய நிலை அதிகரித்து செல்கிறது, வீதி சேதம் அடைகிறது, வாகன நெரிசல் (விபத்துக்கள் இடம் பெற வாய்ப்புக்கள் உள்ளது) எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பினால் இந் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் மேலும் இது தொடர வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இவ் விடயம் தொடர்பாக கவனம் சேலுத்துமாறும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.




No comments: