News Just In

12/30/2019 12:48:00 PM

மின்சார வேலியில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு


மாத்தளை- உகுவெல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

மின்சார வேலியொன்றில் சிக்கியே இவர்கள் மூவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: