News Just In

12/26/2019 02:05:00 PM

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மனித உரிமை, பால்நிலை சமத்துவ கருத்தரங்கு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பால்நிலை சமத்துவமும்  மனித உரிமைகளும் பற்றிய கருத்தரங்கு வியாழக்கிழமை (26.12.2019) அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த்;, மனித உரிமை ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்  இஸ்ஸதீன், மனிதாபிமானத்திற்கான வள நிலையத்தின் பணிப்பாளர் கே. லவகுசராசா உட்பட பல வளவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

அரச அதிபர் கருத்து தெரிவிக்கையில் பட்டதாரி பயலுனர் ஆகிய நீங்கள் அறிவு, திறன், மனப்பாங்கு போன்றவற்றில் வளர்ச்சியடைய வேண்டும் எனவும் மக்களிற்கு சேவை செய்யும் நீங்கள் அவர்களிற்கு திருப்திகரமான வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு ஆளுமை விருத்தி செய்ய வேண்டிய அவசியத்தை அதிகாரிகளும் வளவாளர்களும் வலியுறுத்தினர்.

மாவட்டச் செயலாளர் உதயகுமார் கருத்துத் தெரிவிக்கையில், அலுவலர்கள், ஒரே துறையில் தங்கியிருக்காது தங்களது திறமைகளை பல்வேறு மட்டங்களில் விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

அத்தோடு வாசிப்பு மிகவும் முக்கியமானதாகும் பத்திரிகைகள், புத்தகங்கள் வாசிப்பது போன்றவற்றினால் தனிப்பட்ட ஆளுமைத்திறன் வளர்ச்சியடையும் என்றார்.

No comments: