News Just In

12/28/2019 07:30:00 AM

71 பரீட்சார்த்திகளின் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இரத்து!

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

வெளியான பெறுபேறுகளின்படி ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: