வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூந்தோட்டம் அண்ணா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டிய மூன்று சகோதரர்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த போதே சகோதரர்களான 16, 19,21 வயதுடைய மூவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, சவள் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன.
இந்த நடவடிக்கை வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சம்பத் பெரேராவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திசாநாயக்க தலைமையில் சென்ற பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
12/03/2019 07:40:00 AM
புதையலைத் தேடி வீட்டைத் தோண்டிய 3 சகோதரர்கள் கைது!
Subscribe to:
Post Comments (Atom)


No comments: