ஜேர்மனியின் ஸக்ஸோனி பகுதியிலுள்ள ரின்டெல்ன் நகரில் வசிக்கும் தோமஸ் ஜெரமின் மற்றும் சுசான் ஜெரமின் தம்பதியினரே இந்த உலக சாதனையினை படைத்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு வரை ஒரு நத்தார் மரத்தையே வீட்டில் வைத்திருந்தனர். ஆனால் 2012ஆம் ஆண்டிலிருந்து நத்தார் மரங்களின் எண்ணிக்கையை இவர்கள் அதிகரித்தனர். தற்போது 180 சதுரமீற்றர் பரப்பளவுள்ள தமது வீட்டில் பல்வேறு இடங்களிலும் மொத்தமாக 350 நத்தார் மரங்களை இவர்கள் வைத்துள்ளனர்.

இதற்காக கின்னஸ் சாதனை சான்றிதழும் இத்தம்பதியினருக்கு வழங்கப்பட்டது. இந்த நத்தார் மரங்களுக்கு சுமார் 18,000 மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த தம்பதியினரின் வீட்டிலுள்ள நத்தார் மரங்களை பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: