News Just In

12/25/2019 05:44:00 PM

இராணுவ வீரர் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டு துப்பாக்கி பறிப்பு!

வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.

07ஆவது சிங்க ரெஜிமண்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் இன்று காலை தனது பணி முடிந்து இராணுவ முகாமை நோக்கி சென்றுள்ளார். இதன்போது இனம் தெரியாத நபர்கள் அவரை வாளால் வெட்டித் தாக்கியுள்ளதுடன் அவரது துப்பாக்கியையும் பறித்து சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எம்.ரத்நாயக்க (24 வயது) என்ற இராணுவ வீரர் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: