News Just In

12/24/2019 01:53:00 PM

குவைத் நாட்டில் துன்புறுத்தல் காரணமாக நாடு திரும்பிய 32 பணிப் பெண்கள்!


குவைத் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்களாக தொழில்புரிந்த இலங்கையைச் சேர்ந்த 32 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

தாம் பணியாற்றிய வீடுகளில் முகங்கொடுத்த துன்புறுத்தல்கள் காரணமாகவே அவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு அங்குள்ள இலங்கையை தூதரகத்தில் இது தொடர்பான அறிக்கையையும் கையளித்துள்ளனர்.

மேலும் நாடு திரும்பியுள்ள அவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: