அடுத்த வருடத்தில் புதிதாக 8 ரயில்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இவற்றில் 4 ரயில்கள் அடுத்த மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படும். ரயில் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான பணிகளைத் துரிப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ரயில் சேவை தொடர்பான நேர அட்டவணை அனைத்து ரயில் நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதற்காக இலத்திரனியல் பெயர்ப்பலகை பயன்படுத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
12/28/2019 05:35:00 PM
2020ஆம் ஆண்டில் இருந்து புதிதாக எட்டு ரயில்கள் சேவையில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: