வெளியாகியுள்ள 2019 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஆரையம்பதி-பாலமுனையைச் சேர்ந்த கபீர் பாத்திமா ரிஸா என்ற மாணவி கலைப்பிரிவில் (பழைய பாடத்திட்டம்) மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
1.7477 இசட் புள்ளியினைப் பெற்ற இவர் அரசியல் விஞ்ஞானம், இஸ்லாம் ஆகிய பாடங்களில் A சித்தியினையும், தமிழில் B சித்தியினையும் பெற்று தேசிய ரீதியில் 118ஆவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
இதேவேளை கலைப்பிரிவில் புதிய பாடத்திட்டத்திற்கு தோற்றிய காத்தான்குடி மாணவி முஹம்மட் ஸைனுதீன் பாத்திமா ஸஹ்றா 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் 2.2883 இசட் புள்ளியினைப் பெற்ற இவர் தேசிய ரீதியில் 27ஆவது இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12/28/2019 05:08:00 PM
Home
/
உயர்தரம்
/
உள்ளூர்
/
பரீட்சை முடிவுகள்
/
மட்டக்களப்பு
/
கலைப்பிரிவு புதிய, பழைய பாடத்திட்டத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற காத்தான்குடி, பாலமுனை மாணவிகள்!
கலைப்பிரிவு புதிய, பழைய பாடத்திட்டத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற காத்தான்குடி, பாலமுனை மாணவிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: