இதனை முன்னிட்டு, தேசிய பாதுகாப்புத் தினம் இன்று நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு நினைவுதின நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெறவுள்ளன.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் வகையில், அனைத்து இலங்கையர்களையும், அதேபோல் சகல அரச நிறுவனங்களையும் இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புத் தினத்தின் பிரதான நிகழ்வு காலி பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூபிக்கு அருகில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தினால் இரண்டு லட்சத்து 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இலங்கையில் ஆயிரத்து 700 பேர் வரை இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தனர்.
No comments: