அவர்களில் 238 குடும்பங்களை சேர்ந்த 933 பேர் 15 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் 5 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் 287 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 163 வீடுகள் பகுதி அளவிலும், ஒருவீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
ஹப்புத்தளை, ஹல்துமுல்லை, லுணுகலை, வெலிமடை, பசறை, ஊவா பறணகம, எல்ல, பண்டாரவளை, ஹாலி-எல உள்ளிட்ட பகுதிகளில் சீரற்றக் காலநிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 731 குடும்பங்களைச் சேர்ந்த, 6050 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 7 கட்டிடங்கள் பகுதி அளவிலும், 1 வீடு முற்றாகவும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், 2 இடைத்தங்கல் முகாம்களில், 35 குடும்பங்களைச் சேர்ந்த 241 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 247 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 43 குடும்பங்களை சேர்ந்த 138 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் சீரற்றக் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேரும், அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேரும், மழையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 551 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 3 பேர் சீரற்றக் காலநிலையில் உயிரிழந்திருப்பதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் 6 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்து 764 குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் தென்பகுதி வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் நாளையும் கடுமையான மழைப் பெய்யக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், குருணாகலை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும்.
அதேநேரம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலயா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும், மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்வதறகான சாத்தியங்கள் உள்ளன.
அதேநேரம், வடமேல், தென், மத்திய,ஊவா, வடமத்திய மாகாணங்களில் மணிக்கு 55 கிலோமீற்றர் என்ற கடுமையான காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பரப்பில் அதிகரித்த காற்றுடன் மழைப் பெய்யும் நிலைமை உள்ளதால், அந்த பகுதியை பயன்படுத்துகின்ற கடற்பயணிகள் மற்றும் மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: