யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை காரணமாக டெங்குக் காய்ச்சல் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாணவர்கள் நுளம்புக் கடிக்கு இலக்காகி டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் அறிவித்தும் நடவடிக்கையும் எடுக்கபடவில்லையென மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இருபதுக்கு மேற்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனரென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலே இதுவரை 1991 பேர் டெங்குகாய்ச்சலுக்கு இலக்காகியுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 456 பேர் டெங்குநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த எட்டு நாட்களில் 276 பேர் டெங்குகாய்ச்சல் காணமாகச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
11/09/2019 03:18:00 PM
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் டெங்குகாய்ச்சல் - பலர் வைத்தியசாலையில்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: