News Just In

11/01/2019 06:34:00 PM

யாழ்ப்பாணம்-சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இம் மாதம் 10 திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்திய விமான நிறுவனமான Alliance Air of India நிறுவனம் சென்னை விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கும் இடையில் வர்த்தக பயணிகள் விமான சேவையை இம் மாதம் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க இருப்பதாக தமக்கு அறிவித்துள்ளதாக இலங்கை சிவில் விமான அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் விமான சேவை அறிமுகத்தை முன்னிட்டு சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஒருவழி விமான கட்டணம் இலங்கை நாணயத்தில் 7,900 ரூபா (இந்திய நாணயத்தில் 3,090 ஆகும்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையிலான விமான கட்டணம் 86.5 அமெரிக்க டொலர்கள் (15,700 ரூபா) ஆகும். இதற்கு மேலதிகமாக FITS Aviation Ltd என்ற இலங்கை விமான சேவைகள் நிறுவனமும் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் எதிர்வரும் 8 ஆம் திகதி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையில் திங்கள், புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இந்த விமான சேவைகள் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

No comments: