News Just In

11/01/2019 04:22:00 PM

கடனை திருப்பி செலுத்தும் ஆற்றல் இலங்கைக்கு அதிகரித்துள்ளது

இலங்கை பெற்ற வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சமபவத்திற்கு பின்னர் வீழ்ச்சி கண்டிருந்த சுற்றுலாத் தொழிற்துறை எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க வேகமாக வளர்ச்சி கண்டுவருகின்றது.

இவ்வாறான பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கை பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்தும் ஆற்றல் அதிகரித்திருப்பதாக பொருளாதார வலிமையை மதிப்பீடு செய்யும், சர்வதேச ரீதியில் பொருளாதார மேம்பாட்டை மதிப்பீடு செய்யும் பிரிவான Fitch Rating சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிறுவனம் அமெரிக்காவையும் பிரிட்டனையும் தளமாக கொண்டு செயற்படும் முன்னணி மதிப்பீட்டு பிரிவாகும். வியட்நாமில் பொருளாதார வளர்ச்சிக்காக வலிமையான வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனூடாக உள்ளுர் உற்பத்தியை அதிகரிக்கவும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் அந்த நாடு கவனம் செலுத்தியுள்ளது.

இதே போன்று இலங்கையும் ஏற்றுமதி உற்பத்தித் துறையில் வளர்ச்சி அடைவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று Fitch Rating சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிய பசுபிக் சந்தை மதிப்பீட்டு கணிப்பீடு தொடர்பாக Fitch Rating புதிய அறிக்கையிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நுண்பாக பொருளாதார விஸ்திரத்தன்மையில் மொங்கோலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளுரில் சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை வருமாறு:

No comments: