களுவாஞ்சிகுடி மார்க்கட் வீதியில் அமைந்துள்ள சில்லறைக் கடையொன்றும் கூழ்பார் ஒன்றும் வியாழக்கிழமை (31) நள்ளிரவு உடைக்கப்பட்டு நான்கு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணமும் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழமை போன்று இன்று காலை கடை உரிமையாளர்கள் தங்களது கடையினை திறப்பதற்கு வருகை தந்தபோது தங்களது கடைகள் உடைக்கப்பட்டுள்ளதை தெரியவந்ததையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
முதலில் கூழ்பாரின் வெளிக்கதவினை உடைத்து கூழ்பாரினுள் உள்நுழைந்த கொள்ளையர்கள் நடுச்சுவரினை உடைத்து பக்கத்து கடைக்குள் நுழைந்து நான்கு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணம், கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தும் காட்கள்,மற்றும் சிகரட்கள்,அங்கர் பெட்டிகள் உட்பட சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேற்பட் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இரண்டு கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
11/01/2019 07:02:00 PM
களுவாஞ்சிகுடியில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: