ஓட்டமாவடி பிரதேச சபையினால் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு வீதி விபத்துக்கள் இடம்பெறும் இடங்களில் மின்குமிழ்கள் பொருத்தும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது.
விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மின்குமிழ்கள் மக்கள் பாவனைக்காக பிரதேசசபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மியினால் ஓட்டமாவடி பிரதான வீதி, அதிகளவு விபத்துகள் இடம்பெறும் ஓட்டமாவடி பாலத்தில் இருந்து காவத்தமுனை நோக்கிச் செல்லும் வீதி, ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தின் நுழைவாயில் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.








No comments: