News Just In

11/02/2019 07:51:00 AM

இலங்கை-அவுஸ்திரேலியா இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கட் தொடர் நிறைவு

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற இலங்கை அணியுடனான 3ஆவது இருபதுக்கு 20 போட்டியிலும் டேவிட் வார்னரின் அரைச்சதத்துடன் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 3:0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கட் இழப்புக்கு 142 ஓட்டங்களைப் பெற்றது. குசல் ஜனித் பெரேராவின் சிறந்த துடுப்பாட்டம் காரணமாக 45 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைக் குவித்தது. இதன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கையணி, மூன்றாவது போட்டியிலும் இன்னொரு தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலியாவின் சிறந்த துடுப்பாட்டம் அவர்களை வெற்றிக்கு இட்டுச் சென்றது . டேவிட் வார்னர் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதம் அடித்ததன் மூலம் இந்த இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் ஆட்டமிழக்காமல் மொத்தம் 317 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலியா இலங்கையை 3-0 என்ற கணக்கில் வெள்ளையடிப்புச் செய்து கோப்பையைக் கைப்பற்றியது. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக அவுஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: