News Just In

11/01/2019 10:17:00 AM

ஜனாதிபதியால் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

சிறுநீரக நோய்கள் தடுப்பு மற்றும் நோயாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் 2019 அக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொலை தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்பட்டன.

சிறுநீரக நோயைத் தடுக்கும் ஜனாதிபதி பணிக்குழு மற்றும் பல்வேறு பரோபகாரர்களின் நிதி உதவியுடன், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்க கடற்படையின் உழைப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவை கடற்படை பயன்படுத்தியுள்ளது. இலங்கையின் பல மாவட்டங்களில் நீர் கசிவு சுத்திகரிப்பு இயந்திரங்கள் பெரிய அளவில் நிறுவியுள்ளது.

அதன்படி, அனுராதபுர மாவட்டத்தில் மிஹிந்தலை, பதவிய, பலாகல மற்றும் திரப்பனே பிரதேச செயலகங்கள், புத்தளம் மாவட்டத்தில் அனாமடுவ மற்றும் மகாகும்புக்கடவல பிரதேச செயலகங்கள், குருநாகலை மாவட்டத்தில் போயகனே கிராம நிலதாரி பிரிவு மாத்தறை மாவட்டத்தில் அகுரெஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவிலும்இ கண்டி மாவட்டத்தில் கங்கவட கோரலே பிரதேச செயலகத்திலும் நிறுவப்பட்ட 10 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

சிறுநீரக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கடற்படை வழங்கிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக கடற்படையின் மறு நிரப்பல் நீர் சுத்திகரிப்பு முறையை நிறுவுவதற்கான திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிப்பீட்டு விருதும் வழங்கினார்.

இந்த திட்டத்திற்கான கடற்படை (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) இயக்குநர் கேப்டன் லசித் குணசேகர குறித்த விருதைப் பெற்றார். இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிறுநீரக நோயைத் தடுக்கும் ஜனாதிபதி பணிக்குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: