News Just In

11/01/2019 09:02:00 AM

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் புதிய சாதனைகள்!


ஒக்டோபர் 30ஆம் திகதி ஒன்­பது மாகா­ணங்­க­ளையும் சேர்ந்த 6,000க்கும் மேற்­பட்ட வீர, வீராங்கணைகள் 116 தங்கப் பதக்­கங்­களைக் குறி­வைத்து பங்குபற்றும் 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் அவர்களால் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக ஆரம்பித்து வைக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இப்போட்டிகளில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
01ஆம் நாள்-ஒக்டோபர் 30:
20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தல்-சாவ­கச்­சேரி இந்து கல்­லூரி வீரர் ஏ.புவி­தரன் 4.82 மீற்றர் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிலை­நாட்டி தங்கப் பதக்­கத்தை வென்றார்.

02ஆம் நாள்-ஒக்டோபர் 31:
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த என். டக்சிதா 3.35 மீற்றர் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிலை­நாட்டி தங்கப் பதக்­கத்தை வென்றார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 15.95 மீற்றர் தூரத்தை பதிவு செய்து பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்­கத்தை வென்றார்.

No comments: