News Just In

11/10/2019 07:51:00 AM

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி-தேர்தல் ஆணைக்குழு தலைவர் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார்.

வாக்களிப்பின் போது ஒரு வேட்பாளருக்கு முதலாவது விருப்பு வாக்கை அளிக்க முடியும். அத்துடன் மற்றும் இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கை அளிக்க முடியும். தாம் விரும்பினால் ஒருவருக்கு மாத்திரமும் வாக்களிக்கவும் முடியும்.

வாக்காளர் ஒருவர் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்பினால் அந்த வேட்பாளரது சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட வேண்டும்.
வாக்களிக்கும் போது முதலாம் தெரிவுக்கு புள்ளடியிட்டால், இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவுகளுக்கு இலக்கமிட முடியாது. அதே போன்று ஒரே வாக்குச் சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட புள்ளடியிடவும் முடியாது. இவ்வாறான வாக்குகளே நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக இனங்காணப்படும்.

அத்தோடு முதலில் ஒரு சின்னத்திற்கு அருகில் புள்ளடியிட்டு பின்னர் அது தவறெனக் கருதி அதனை கிறுக்கல் மூலம் நிராகரித்து மீண்டுமொரு சின்னத்திற்கருகில் புள்ளடியிட்டால் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியற்றதாகவே கருதப்படும். எனவே மக்கள் வாக்களிக்கும் விடயத்தில் தெளிவுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

No comments: