ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
13 ஆம் திகதிக்கு பின்னரும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டால் சட்ட ஆலோசனைக்கு அமைய அதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இறுதி பிரசாரக் கூட்டங்களின் செய்திகள் எதிர்வரும் வியாழக்கிழமை பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒரு செய்தியை மாத்திரமே உள்ளடக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இறுதி பிரசாரக் கூட்டங்களின் செய்திகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் வியாழக்கிழமை பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் அது தொடர்பான செய்திகளில் ஒரு செய்தியை மாத்திரமே உள்ளடக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் மூலம் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க குறிப்பிட்டார். ஆட்பதிவுத் திணைக்களம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுமார் 3 இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இவை உதவி மற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மூலம் வாக்காளர்களிடம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேற்று கையளிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
11/10/2019 06:44:00 PM
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட கால எல்லை நிறைவடையவுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments: