News Just In

11/02/2019 10:36:00 AM

ருவன்வெலி மகாசேய புனிதப்பொருளை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

ருவான்வெலி மகாசேயவில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ள புனிதப்பொருள் (மாணிக்கக்கல் அடங்கிய சூடாமணி) இம் மாதம் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் மிஹிலக்க மண்டபத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

அன்றை தினம் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையில் இதனை பொதுமக்கள் பார்வையிட முடியும் என்று ருவான்வெலி மகாசேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லெகம ஹேமரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நவம்பர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையில் மகாசேய மண்டபத்தில் இந்த புனிதப்பொருள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. இதன்போது வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. காலை 8.00 மணி முதல் பொதுமக்களின் பார்வைக்காக இந்த புனிதப்பொருள் வைக்கப்படும்.

No comments: