News Just In

11/02/2019 10:22:00 AM

வானிலை அறிக்கை

நாட்டில் தெற்கு சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நாளை (நவம்பர் மாதம் 3 ஆம் திகதி) மழையுடன் கூடிய காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைந் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் கிழக்கு கடற்பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற் பிரதேசத்தில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற் பிரதேசத்தில் காற்று வடமேற்கு திசையில் வீசுவதுடன் நாட்டை சூழவுள்ள கடற் பிரதேசத்தில் குறிப்பிட்ட திசைக்கு அப்பால் காற்று வீசக்கூடும்.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தை கொண்டிருக்கும். இடியுடன் கூடிய மழையின் போது இந்த கடற்பிரதேசத்தில் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். அக் காலப்பகுதியில் தற்காலிகமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசத்திற்கான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: