News Just In

11/02/2019 11:00:00 AM

அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் கிழக்கு மாகாண மாணவர்கள் சாதனை!

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் பங்குபற்றிய மட்டக்களப்பு அன் நூர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஏ அய்மன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (01) காலை நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதலில் 15.03 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து ஏ.ஆர்.ஏ அய்மன் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணம் சார்பாக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.எம் ரிஹான் 58.86 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

No comments: