News Just In

11/02/2019 01:38:00 PM

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு!

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மறு அறிவித்தல் வரை இன்று மூடப்படுவதாக பல்கலைக்கழக பதில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றமை காரணமாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக பூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் பதில் உப வேந்தரான பேராசிரியர் ஏ.எம்.ஜே.டீ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

No comments: