உலகக் கிண்ண ரக்பி சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி ஜப்பானின் யோகோஹாமா நகரில் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் இரண்டு மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமான 09 ஆவது றக்பி உலகக கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனா, அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, பீஜி, பிரான்ஸ் ஜோர்ஜியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நமீபியா. நியூஸிலாந்து, ரஷ்யா, சாமோ. ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, டொங்கா, உருகுவே, அமரெிக்கா மற்றும் வேல்ஷ் உட்பட மொத்தம் 20 நாடுகள் கலந்து கொண்டன.
இத் தொடரில் முதலாவதாக நடந்த அரையிறுதிப் போட்டியொன்றில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வேல்ஸை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணியும் இறுதிப் போட்டியில் நுழைந்தன.
உலக றக்பி தரவரிசைப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத் போட்டிகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைவது 3 ஆவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
11/02/2019 01:44:00 PM
உலகக்கிண்ண ரக்பி இறுதிப்போட்டி இன்று
Subscribe to:
Post Comments (Atom)

No comments: