News Just In

11/02/2019 03:46:00 PM

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் ஏற்றுமதி விவசாய மேம்பாட்டு திட்டம் முன்னெடுப்பு

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் ஏற்றுமதி விவசாய மேம்பாட்டு திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

இத் திட்டத்தின் கீழ் கறுவா, மிளகு உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியில் 50 வீதத்திற்கு முதலீட்டு நிதியுதவி வழங்கப்படும். கராம்பு, சாதிக்காய், கோப்பி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றுக்கான கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன் சிறிய அளவிலான விவசாயத் திட்டத்தின் கறுவா, மிளகு உற்பத்திக் காணிகளுக்கு இலவசமாக கன்றுகளும் வழங்கப்படும்.

அத்துடன் உற்பத்திகளுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பையும், காலநிலையால் ஏற்படும் தாக்கத்தையும் தடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments: