ஜனாதிபதி செயலகத்தில் அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (10.11.2019) சந்தித்தனர்.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் முன்னர் ஆளுனர்களை சந்திக்கும் இறுதி சந்திப்பு இதுவாகும்.
இதேவேளை மாகாண ஆளுனர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கும் ஆளுனர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சில ஆளுனர்கள் ஜனாதிபதி தேர்தல் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11/11/2019 09:31:00 AM
ஜனாதிபதி-மாகாண ஆளுனர்கள் இடையிலான சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments: