News Just In

11/27/2019 08:07:00 AM

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நியமனம் இன்று!

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (27.11.2019) காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சுக்களது செயலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் இன்று முற்பகல் 11.30 அளவில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: