
கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. நவகீதா தர்மசீலன் (BA / PGDE / DSM) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மண்டூர் கிராமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் (1998/1999) இளங்கலைமாணி பட்டத்தைப் பெற்றார். ஆசிரியர் சேவையினை 1988 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 2009 ஆம் ஆண்டு அதிபர் சேவையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார் . கடந்த 2015 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் சேவை தரம் - 1 தகுதியைப் பெற்றுக்கொண்டார்.
மண்டூர் இராமகிருஷண மிசன் மன்றத்தின் அங்கத்தவரான அதிபர் திருமதி. நவகீதா தர்மசீலன் 2016, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் மூன்று தடவைகள் அதிபர்களுக்கான ஜனாதிபதி உயர் விருதான 'குரு பிரதீபா பிரபா' விருதினைப் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி. நவகீதா தர்மசீலன் அவர்களை கல்லடி பிரதேச சமூகம் சார்பாக மட்டக்களப்பு கல்வி கலை பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியம், அதில் அங்கம் வகிக்கும் ஆலயங்கள், விளையாட்டுக் கழகம், மற்றும் அமைப்புக்களின் உறுப்பினர்கள் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.











No comments: