News Just In

11/11/2019 11:21:00 AM

சச்சின் டெண்டுல்கரின் 30 வருட கால சாதனை முறியடிப்பு!

இந்தியாவின் சார்பில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரைச் சதத்தை பெற்றுக்கொண்ட வீரராக சச்சின் டெண்டுல்கார் நிலைநாட்டியிருந்த சாதனையை 30 வருடங்களுக்கு பின்னர் 15 வயதான ஷாபாளி வர்மா (Shafali Verma) என்ற வீராங்கணை முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற இருபதுக்கு 20 போட்டியிலேயே இந்த இளம் வீராங்கணை இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இந்தியாவின் சார்பில் இருபதுக்கு 20  போட்டியில் கலந்துகொண்ட ஆகக்குறைந்த வயதைக்கொண்ட வீராங்கணை என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.

1989 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கார் 50 ஓட்டங்களைப் பெற்ற போது அவருக்கு 16 வயதாகும்.

No comments: