News Just In

10/19/2019 07:00:00 AM

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச யாழ் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது தொடர்பில் விமர்சித்துள்ளார். 

தேர்தல் மேடையில் அவர் உரையாற்றிய போது, அரச மொழிக் கொள்கைக்கு அமைய யாழ் சர்வதேச விமான நிலையத்தில் காணப்படுகின்ற பெயர்ப்பலகையில், சிங்களத்தில் முதலிலும், தமிழில் இரண்டாவதாகவும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தமிழ் முதலிலும், இரண்டாவதாக சிங்களமும், ஆங்கிலம் மூன்றாவதாகவும் எழுதப்பட்டுள்ளது. தற்போது மொழிக் கொள்கைகள் பின்பற்றப்படுவதும் இல்லாமல் போயுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments: