தேசிய ரீதியிலான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
பல துறைகளின் கீழ் மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந் நிகழ்வில் சுற்றாடல் முன்னோடிக்கான ஜனாதிபதி பதக்கத்தினை மட்/வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவர்கள் இருவர் பெற்றுக்கொண்டனர்.
சுற்றாடல் முன்னோடி மாவட்ட ரீதியான தமிழ் மொழிப் பிரிவில் ஜெயாபரன் அனுசதுர்திகா முதலாம் இடத்தினையும் உதயதேவன் சசாந் இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதலாம் இடத்தினைப் பெற்ற மாணவி அனுசதுர்திகாவிற்கு வெளிநாடு செல்வதற்கான புலமைப் பரிசில் கிடைத்துள்ளது. இவர் " "நஞ்சற்ற உணவு பயிர்களை தயாரித்தல் " எனும் தொனிப்பொருளில் தமது செயற்றிட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியை திருமதி சத்தியலெட்சுமி துரைசிங்கம், மற்றும் பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்களாவர்.


No comments: