News Just In

10/12/2019 05:11:00 PM

சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தின் சிரமதானப் பணி

சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தினரால் இன்று சனிக்கிழமை (12.10.2019) சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

சிவானந்தா பாடசாலை தொடக்கம் சிவானந்தா மைதான எல்லை வரையிலான கல்லடி பிரதான வீதியின் நடுப்பகுதியில் தொடராக நடப்பட்ட மரங்களை அண்டிய பகுதிகளை துப்பரவு செய்து மரங்களுக்கான வேலியிடல் அடங்கலான சிரமதானப் பணிகள் சிவானந்தா பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இச் சிரமதான பணியில் சிவானந்த பழைய மாணவர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

குறித்த பகுதியிலுள்ள மரங்கள் சிவானந்தா பழைய மாணவர் சங்கத்தினரால் நடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.





No comments: