News Just In

10/29/2019 01:01:00 PM

மரண தண்டனை - இடைக்கால தடையுத்தரவு நீட்டிப்பு

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு, டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகார எஸ். துரைராஜா காமினி அமரசேகர ஆகியோரைக்கொண்ட நீதியரர் குழுவினர் இன்று (29) இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்தார்.

அதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: