கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் T.ராஜ்மோகன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (29) சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும், ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்தாஜீ மகராஜ், கல்லடி டச்பார் புனித இக்னேசியஸ் தேவாலயத்தின் அருட்தந்தை S.ரொஷான் SJ அவர்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் V.மயில்வாகனம் அவர்களும், கௌரவ அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவர்களான Dr.V.விஜயகாந்த், Dr.V.சண்முகப்ரியன் ஆகியோரும், அழைப்பு அதிதிகளாக பாடசாலையின் மேம்பாட்டு இணைப்பாளர் ஆசிரிய ஆலோசகர் S.இலங்கேஸ்வரன், கிராம சேவை உத்தியோகத்தர் S.J சாலமொன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவில் தரம் 05 புலமைப்பரிசில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள், பாடசாலையில் சிறந்த வரவினை பேணிய ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசில்கள்,சான்றிதழ்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


























No comments: