News Just In

10/29/2019 04:27:00 PM

வாகனங்களில் வேட்பாளர்கள், கட்சி நிறங்களை பிரதிபலிக்கும் ஸ்ரிக்கர்களை ஒட்டுவது தடை

தனியார் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் ஜனாதிபதி வேட்பாளர்களது மற்றும் கட்சி நிறங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஸ்ரிக்கர்களை ஒட்டுவது தடையாகுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில், தனியார் பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஒவ்வொரு வேட்பாளர்களின் படங்கள், கட்சி நிறங்கள், சின்னங்கள் உள்ளிட்ட ஸ்ரிக்கர்கள் மற்றும் கொடிகள் காணப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
இவ்வாறான செயல்பாடுகள் ஜனாதிபதித் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய, குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரிக்கர்கள், கொடிகள் என்பனவற்றை உடன் அகற்றுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments: