News Just In

10/29/2019 12:39:00 PM

வாகரை பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வும் நூல் வெளியீடும்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வு வாகரை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் 11 மணியளவில் திங்கட்கிழமை (28) நடைபெற்றது.

உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வின் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டார். 

மேலும் கல்குடா கல்வி வலய பணிப்பாளர் தினகரன் ரவி, கோட்டக்கல்வி அதிகாரி, வாகரை பிரதேசசபையின் செயலாளர், வேல்ட் விசன் நிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வாகரை பிரதேச சிறுவர்கள், முதியோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மகுடம் எஸ்கோவரண்டினா, சிறுவர் அபிவிருத்தி திணைக்களம், சிறுவர் பாதுகாப்பு சபை, வேல்ட் விசன் லங்கா, கோறளைப்பற்று வடக்கு பிரதேசமும் இணைந்து சிறுவர் முதியோர் தினத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வேளை அரும்புமலர் வெளியீடும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜினால் வெளியீடு செய்யப்பட்டது இப்பிரதிகள் “அரும்பு 12” நூல் சிறப்பு பிரதியினை அரசாங்கஅதிபர் வெளியீட்டு வைத்தார்.

இவ்வைபவத்தில் சிறார்கள் மத்தியில் நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு, நடனம், குழு நாட்டியம் ஆகியபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் ,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments: