(S.சதீஸ்)
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் உன்னிச்சைத் திட்டம் மற்றும் மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் இவ்வருட பெரும்போக நெற் செய்கையின் விதைப்பு நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது..
இதில், சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை, உன்னிச்சைத்திட்டம், வலதுகரை வாய்க்கால், இடதுகரை வாய்க்கால் ஊடான பயிர்ச்செய்கை மூலம் இவ்வருடம் 31,230 ஏக்கர் நெற் செய்கை பண்ணப்படவுள்ளது.
உன்னிச்சைத் திட்டத்தின் கீழ் வலதுகரை வாய்க்கால் விஸ்தீரணம், ஆற்றுப்பாய்ச்சல், இடதுகரை வாய்க்கால் போன்றவற்றில் மொத்தமாக 15,179 ஏக்கரும் சிறிய நீர்ப்பாசனம், மானாவாரிக் கண்டங்களின் பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் 16,051 ஏக்கரும் மொத்தமாக இவ்வருட பெரும் போகத்தில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் மொத்தம் 31,230 ஏக்கர் நெற்செய்கை பண்ணப்படுகின்றது
இப் பிரதேசத்தில் பொருத்தமான காலத்தில் மழை இல்லாத போதிலும் அவ்வப்போது ஓரளவு மழை பெய்துள்ளது. இதனை நம்பி தற்போது விவசாயிகள் வயல் நிலங்களில் விதைத்து வருகின்றனர்.
கடந்த சிறுபோகத்தின் இறுதிக்காலப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பல விவசாயிகள் இந்த நெற்செய்கையில் பெரும் நஸ்டத்தினை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: